×

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை வைக்க வேண்டும்- மேயர் பிரியா உத்தரவு

 

சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்களை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மேயர் பிரியா, “கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் தான் இருந்தது, மு.க.ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. மாமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் சிலர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை அகற்ற சொல்கின்றனர். அது தவறு. சென்னை மாநகராட்சி ஆணையர் அகற்ற சொல்லாத நிலையில் முன்னாள் முதல்வர் புகைப்படத்தை அகற்ற தேவையில்லை. இனிமேல் கட்டும் புதிய கட்டிடத்திற்கு வேண்டும் என்றால் புதிய முதலமைச்சர் புகைப்படத்தை வைத்து கொள்ளுங்கள்” என்றார்.