முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மனைவி காலமானார்..!!
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன்.கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர்
தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கிய சண்முகநாதன், எதிர்க்கட்சி தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து தட்டச்சி செய்து அரசுக்கு அனுப்புவார்.
அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது, 1969ம் ஆண்டில் கருணாநிதியின் உதவியாளராக நியமிக்கப்பட்ட சண்முகநாதன், கருணாநிதி உயிரிழக்கும் வரை 48 ஆண்டு காலம் அவரது உதவியாளராகவே இருந்து வந்தார்.
இந்நிலையில் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மனைவி யோகம் இன்று (அக்., 16) காலமானார். சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார். சண்முகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான நிலையில், அவரது மனைவியும் இன்று இயற்கை எய்தினார்.