×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார் 

 

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சின்னச்சாமி. 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் நின்று சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று சின்னசாமி எம்.எல்.ஏவாக தேர்வானார். தொடர்ந்து அதிமுகவில் அதிருப்தியில் இருந்துவந்த சின்னசாமி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நன்றாக இருப்பதாக சாதாரண மக்களும் சொல்கிறார்கள் என திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் MLA சின்னசாமி பேட்டியளித்தார்.