முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலெட்சுமிக்கு முக்கிய பதவி..!
அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கொள்கை பரப்பு துணைச்செயலாளர்களாக எம்எல்ஏ சுகுமார், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி. சுப்பிரமணியன், கே.சி.பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.மகளிர் அணி இணைச்செயலாளராக முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்க்கோட்டை S.G. சுப்பிரமணியனும்(முன்னாள் எம்எல்ஏ), கட்சி மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் V.M. ராஜலெட்சுமியும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் மற்றும் கட்சி மகளிர் அணி இணைச் செயலாளராகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்
* S.M. சுகுமார், M.L.A., (இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் )
* எதிர்க்கோட்டை S.G. சுப்பிரமணியன், Ex. M.LA., (சாத்தூர் தொகுதி, விருதுநகர் கிழக்கு மாவட்டம்)
* K.C. பழனிச்சாமி, B.Com., (சூரியம்பாளையம் பகுதிக் கழகச் செயலாளர், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர்)
கட்சி மகளிர் அணி இணைச் செயலாளர் : V.M. ராஜலெட்சுமி (கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர்)
கட்சி உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு pic.twitter.com/TiOSxWfyLn
— AIADMK (@AIADMKOfficial) June 26, 2026
null