×

தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்!

 

அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் திமுகவில் இணைந்தார்.

கடந்த மாதம் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர்  குழந்தைவேலு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக ஒரு தரப்பினர் போர் கொடி தூக்கினர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடதக்கது.