×

கமல் ஹாசனுக்கு  நன்றி சொன்ன  ஃபோர்டு  நிறுவனப் பணியாளர் அமைப்பு!

 

அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு சென்னையில் உற்பத்தி பணியை நிறுத்தப்போவதாக கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், 25 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு பலத்த நஷ்டம் நிறுவனத்தையும் விரைவில் மூட போகிறோம் என்று அறிவித்திருக்கிறது போர்டு நிறுவனம். நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு நாளின் நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவரது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர். லாபம் வந்தால் எனக்கு; நஷ்டம் வந்தால் மூடி விட்டு ஓடிவிடுவோம் என்பது குறுகிய மனப் போக்கு . இது ஏற்புடையது அல்ல.

இது நாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், மானியங்கள் ,நீர் உள்ளிட்டவற்றிற்கு பொருளே இல்லாமல் ஆகிவிடும். முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும் கவனமும் நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் ஆலையை மூடும் முடிவை கைவிட்டு மீண்டும் உற்பத்தி பணியை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், தனது உற்பத்திப் பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்துவந்தது. பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன்மூலம் தமிழகத்திலும் குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.இந்நிலையில், அந்நிறுவனம் தனது இந்திய யூனிட்டுகளை மூடுவதாக அறிவித்தது. பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை, நமது தலைவர் `நம்மவர்' அவர்கள் கண்டித்துக் குரல்கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், அந்நிறுவனப் பணியாளர்கள் நம்மவரைச் சந்தித்தனர். அவர்களிடம் நம்மவர் ஃபோர்டு நிறுவனத்தைத் தக்கவைக்க, தான் மேலும் முயல்வதாகக் கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.