தமிழகத்தில் முதல் முறையாக AI தொழில்நுட்ப துறை..! இந்த துறைக்கு அமைச்சர் யார் தெரியுமா ?
இந்தியாவில் இரண்டவது மாநிலமாக AI தகவல் தொழில்நுட்பத் துறை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கேரளா மாநிலத்தில் மே 21ம் தேதி அமைச்சரவை பதவியேற்பின் போது AI துறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு அமைச்சரும் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் முதல் முறையாக AI தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக கேரளா மாநில பி.கே. குன்ஹாலிகுட்டி நியமிக்கப்பட்டர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் மூத்த தலைவர் பி.கே. குன்ஹாலிகுட்டிக்கு தொழில்கள் மற்றும் வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டது. கேரள அரசு முதல் முறையாக அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI)க்கென ஒரு பிரத்யேகத் துறையை உருவாக்கியது, இந்த நடவடிக்கை மாநிலத்தின் கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்திலும் இந்த துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக AI தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக சென்னை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த துறை பலரின் கவனைத்தை பெற்றுள்ளது. தமிழகம் AI தொழில்நுட்பதில் வளர்ந்து வரும் மாநிலமாக உருவெடுத்து வருகிறது. தற்போது அதற்கென ஒரு துறை அமைக்கப்பட்டது வரவேற்கதக்கதாக பார்க்கபடுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவுத் துறையானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளுடன் சேர்த்து, தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும்.
வேளச்சேரி தொகுதியின் வெற்றி பெற்ற வேட்பாளர் அமைச்சராவது இதுவே முதல் முறையாகும்.