×

பழனியில் வரலாற்றில் முதன்முறையாக பஞ்சாமிர்தம் விற்பனை 60 கோடியை தாண்டியது

 

 

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரலாற்றில் பஞ்சாமிர்தம் விற்பனை முதல் முறையாக 60 கோடியை தாண்டியது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். ஆண்டிக்கோலத்தில் மலைமீது நிற்கும் மூலவர் சிலை, போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அங்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரபலமான ஒன்றாகும். இந்த பஞ்சாமிர்தமானது  வாழைப்பழம், பேரீச்சம் பழம், தேன், ஏலக்காய், வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.  

இந்நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரலாற்றில் பஞ்சாமிர்தம் விற்பனை முதல் முறையாக 60 கோடியை தாண்டியது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால், அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ.100 கோடியாக பழனி கோவில் ஓராண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பஞ்சாமிர்தம் விற்பனையும் முதன்முறையாக ரூ.60 கோடியை தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.