வானில் பறந்து யோகா..! 150-க்கும் மேற்பட்ட ஆசனங்கள் - மிரண்டு போன பார்வையாளர்கள்!
Mar 11, 2026, 11:01 IST
சென்னை பல்லாவரம் அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் யோகா பள்ளியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஏரியல் யோகாவுடன் உயரே பறப்போம்’ என்ற தலைப்பில் நோவா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 9 மாணாக்கர்கள் பங்கேற்று தொட்டிலில் தொங்கியபடி 150-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து அசத்தினர். இந்தச் சிறந்த முயற்சி, நோவா உலக சாதனை அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. சாதனை படைத்த மாணாக்கர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.