×

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வணிகத்திற்கு அரசு தளர்வுகள் அளித்துள்ளது. ஆனால், சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்ததற்கு
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வணிகத்திற்கு அரசு தளர்வுகள் அளித்துள்ளது. ஆனால், சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்ததற்கு காரணமான கோயம்பேடு மார்க்கெட் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டையும் பிற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளையும் திறக்க கோரி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் குறித்து சென்னை புரசைவாக்கத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூட வியாபாரிகள் முடிவெடுத்துள்ளதாக வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.