×

13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..! இதில் உங்க மாவட்டம் இருக்கா..? 

 

பீஹார் மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக பலத்த மழை கொட்டி வருகிறது. மழை எதிரொலியாக கங்கை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தலைநகர் பாட்னா வெள்ளத்தில் மிதக்கிறது.

கங்கை மட்டுமல்லாது, கோசி, கண்டக் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயருகிறது. குறிப்பாக சரண் மாவட்டத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாப்ரா நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.ரேவல்கன்ஜ், சோன்புர், சப்ரா சாதர் பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மழையின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் 13 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நிவாரண முகாம்கள், குடிநீர், மருந்துகள், தடுப்பூசி வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்குமாறு மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.