×

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு எச்சரிக்கை!

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி பகுதியில் தொடர்ந்து பெய்து
 

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் நீர் தேக்கங்களில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.