×

சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா..!

 

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனால் இன்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று செல்ல இருந்த அமிர்தசரஸ்- பர்மிங்காம் ( AI117), டில்லி- சூரிச் (AI151), டில்லி- கோபன்ஹேகன் (AI157), பர்மிங்காம் - டில்லி (AI114) விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான அனைத்து மற்ற விமானங்களும் மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்தி அட்டவணைப்படி இயக்கப்படும். ஏர் இந்தியா விமான நிறுவனம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் மாற்று ஏற்பாடு செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.