அனுமதியின்றி கொடிக்கம்பம் - பாஜகவினர் கைது
Nov 1, 2023, 11:13 IST
அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பாஜகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷனில் அனுமதி இன்றி பாஜக கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்க முயன்றதை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.