×

சிவகாசி அருகே  பட்டாசு ஆலை வெடி விபத்து : 5 பேர் உயிரிழப்பு..!

 


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 

சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.   இந்த பட்டாசு ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல பலரும் வேலை செய்துவருகின்றனர்.  இந்த நிலையில் இன்று காலை திடீரென  பட்டாசு ஆலையில்  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.  உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த  நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த  தீயணைப்புத்துறையினர்  மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில்   ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பல கி.மீ தூரத்திற்கு புகை மண்டலம் காட்சியளித்தது.  

இந்த வெடி விபத்து நிகழ்ந்த போது பட்டாசு ஆலையின் உள்ளே பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியதாகவும், ஆகையால் உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.  தீ   கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.