×

3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்!

ஊரடங்கு உத்தரவால் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி மீன் பிடிக்கக் கூடாது என்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி மீன் பிடிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தடையை குறைக்குமாறு
 

ஊரடங்கு உத்தரவால் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி மீன் பிடிக்கக் கூடாது என்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி மீன் பிடிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தடையை குறைக்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் படி, கிழக்கு கடற்கரை பகுதியில் மே-31 ஆம் தேதி வரையிலும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் 31 ஆம் தேதி வரை தடைகாலம் குறைக்கப்பட்டது. அதனால் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறைக்கு விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தமாக உள்ள 240 விசைப்படகுகளில், சுழற்சியின் அடிப்படையில் 120 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.