×

நாளை முதல் இந்த 33 கேள்விகளுக்கு பதில் அளிக்க ரெடியா?

 

ஆக.1 முதல் 30 வரை தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.


ஆக.1 முதல் 30 வரை தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாளை முதல் ஜூலை 31 வரை ஆன்லைன் வாயிலாக பொதுமக்கள் விவரங்களை சமர்பிக்கலாம். https://se.census.gov.in என்ற வெப்சைட்டில் விவரங்களை சமர்பிக்க முடியும். ஒவ்வொரு குடிமகனிடமும் 33 கேள்விகளை கேட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பில் வீடுகளில் உள்ல வசதிகள் குறித்த விவரங்கள் பெறப்படும். இணையதள வசதி, தொலைக்காட்சி, கார், ஜீப், வென் உள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். சைக்கிள், பைக் ஆகியவை உள்ளதா? குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம் குறித்த கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. குடும்பத்தில் உள்ள தம்பதிகளின் எண்ணிக்கை குறித்த கேள்வியும் இடம்பெற்றுள்ளது.