வீரமணிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு வசதி?
‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் வீரமணிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுத்த விஜய்.
தனியறை, கட்டில், மின்விசிறி, ‘வெஸ்டர்ன்’ கழிவறை வசதி, தினமும் காலையில் பத்திரிக்கைகள் கொடுக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து தினமும் சிறை டாக்டர்கள் பரிசோதனை செய்கிறார்கள். அவர் கேட்கும் மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. சிறை உணவைத்தான் அவர் சாப்பிடுகிறார். வாரம் 2 முறை உறவினர்கள் & வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி, தனி அறையில் இருப்பதால் மற்ற கைதிகளுடன் அதிகமாக பேச வாய்ப்பு இல்லை. அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 3 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெம் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரகாஷ் என்பவருக்கும் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் வழங்க பிரகாஷை போலீஸ் தேடி சென்ற நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் தனது பெயர் சிறுமிகள் பாலியல் வழக்கில் (எஃப்ஐஆர்) சிக்காமல் இருக்க வீரமணி, காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் ரூ. 70 கோடி மதிப்பிலான பணத்தை செட்டில் செய்ததாக சொல்லப்படுகிறது.