☰
×

முதலில் இந்த 4 கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்; காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி..!!

 

சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமர் ஒருபோதும் இந்த மேசையில் அமர முடியாது' என ராகுல் கடுமையாக சாடி இருந்தார்.

அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் முத்தரப்புப் பேச்சு புகைப்படத்தை காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பகிர்ந்து, சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமர் ஒருபோதும் இந்த மேசையில் அமர முடியாது' என ராகுல் கடுமையாக சாடி இருந்தார். 

இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார்.அவர், காங்கிரஸ் கட்டாயம் இந்த 4 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:

* 1962ம் ஆண்டு எனது கிராமம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது; அந்த அவமானத்திற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா?

* காங்கிரஸ் இந்தியாவை ஒரு ஏழை நாடாகவே வைத்திருந்தது, ஏன்?

* இந்தியா ஏன் 'பாம்பாட்டிகளின் தேசம்' என்று அழைக்கப்பட்டது?

* இந்தியாவின் பொருளாதாரம் ஏன் ஹிந்து வளர்ச்சி விகிதம் என்று அவமதிக்கப்பட்டது?