தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் தீப்பந்தப் போராட்டம்..!
பா.ஜ., மாநில துணை தலைவர் ராமலிங்கம் அறிக்கை:
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், தமிழக மக்களின் உணர்வையும், முருக பக்தர்களையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு புண்படுத்தியுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் திரண்டிருந்த முருக பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், ஹிந்து மக்களை ஏமாற்றும் முதல்வர் விஜயை கண்டித்து, தமிழகம் முழுதும் இன்று, தீப்பந்த போராட்டத்தை, தமிழக பா.ஜ., நடத்துகிறது. தமிழகம் முழுதும், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. ஒன்றியம், டவுன் பஞ்., நகரம், பெருநகரம் மற்றும் மாவட்ட தலைநகரம் ஆகியவற்றை நோக்கி இன்று(நவ.27) காலை, 10:00 மணிக்கு, பா.ஜ.,வின் இருவண்ண கொடியை ஏந்தி, தீப்பந்த போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.