☰
×

தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசு வெடித்து சிதறியது! – கல்லூரி மாணவர் பரிதாப பலி...3 பேர் படுகாயம்..!!

 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக் குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய மகன் யோகேஷ் (வயது 20). இவருடைய நண்பர் மனோஜ் (21). இருவரும் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் பட்டாசுகள் வாங்கி வந்து வீட்டின் மாடியில் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக அந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் வீடு பலத்த சேதம் அடைந்தது. மேலும் இந்த வெடி விபத்தில் யோகேஷ், மனோஜ், யோகேஷின் தாய் யோகவாணி (45) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரை யும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வெடிவிபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலூர் வட்டாட்சியர் வசந்த், ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

இதற்கிடையே விபத்து நடந்த இடத்தை மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், தாசில்தார் வசந்த் ஆகி யோர் பார்வையிட்டனர். இந்த வெடி விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.