தீப்பற்றி எரிந்த பிரசவ வார்டு: உயிரைப் பணையம் வைத்து பிஞ்சுகளைக் காப்பாற்றிய நர்ஸ்களுக்கு பாராட்டு மழை!
மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து புதிதாக பிறந்த 9 பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலிர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ச
த்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி பகுதியில் உள்ள ஆசியன் மருத்துவமனையின் பிரசவ வார்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட செவிலியர்கள், சிறிதும் பதற்றம் அடையாமல், 9 பச்சிளம் குழந்தைகளை உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றினர். மேலும், ஐசியூ உள்பட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 58 நோயாளிகளையும் உஷார்படுத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவென பரவியது. உடனடியாக மருத்துவமனைக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசாரும் நேரில் சென்று தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்ட போதும், சாமர்த்தியமாக செயல்பட்டு பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்க்கும் நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
महाराष्ट्र : छत्रपति संभाजीनगर के हॉस्पिटल के बच्चा वार्ड में भीषण आग लग गई। उस वक्त वार्ड में 9 नवजात बच्चे भर्ती थे। स्टाफ ने तत्परता दिखाकर सभी को सुरक्षित बाहर निकाल लिया। pic.twitter.com/pafbxImMNo
— Sachin Gupta (@Sachingupta) September 4, 2026
महाराष्ट्र : छत्रपति संभाजीनगर के हॉस्पिटल के बच्चा वार्ड में भीषण आग लग गई। उस वक्त वार्ड में 9 नवजात बच्चे भर्ती थे। स्टाफ ने तत्परता दिखाकर सभी को सुरक्षित बाहर निकाल लिया। pic.twitter.com/pafbxImMNo
— Sachin Gupta (@Sachingupta) September 4, 2026