மதுரையில் மின்னல் தாக்கியதில் சோஃபா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!
மதுரையில் உள்ள சோபா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை தினமான நேற்றிரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரு குடோன்களில் உள்ள சோபாக்கள், உதிரிபாகங்கள், மர ஜாமான்கள் எரிந்து சாம்பலாகின. அருகிலுள்ள 6 வீடுகளுக்கும் தீ பரவியதால் குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உயிர்ச்சேதம் இல்லை.தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கல்லாணை சம்பவ இடத்திற்கு சென்றுகுடி யிருப்புவாசிகளுக்கு ஆறுதல் கூறி அருகிலுள்ள சமூதாய கூடத்தில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.
#JUSTIN மதுரையில் மின்னல் தாக்கியதில் சோஃபா நிறுவனத்தில் பற்றிய தீ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 1, 2026
குடியிருப்புகளுக்கும் பரவிய தீயை போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்#Madurai #FireAccident #SofaShop #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/sZpIxNLW86