×

கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து.. உடல் கருகி உயிரிழந்த 7000 கோழிக் குஞ்சுகள்!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பண்ணையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 20 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட 2 கோழிப்பண்ணை மற்றும் கோழிக்கு தீவனம் வைக்கும் அறை என அனைத்திலும் தீ மளமளவென பரவியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வீரர்கள் சம்பவ
 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பண்ணையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 20 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட 2 கோழிப்பண்ணை மற்றும் கோழிக்கு தீவனம் வைக்கும் அறை என அனைத்திலும் தீ மளமளவென பரவியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாகவே கோழிப்பண்ணையில் இருந்த கோழிக்குஞ்சுகள் மீது தீ பரவியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் 7000 கோழி குஞ்சுகளும் பண்ணையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து நாசம் ஆகியிருக்கின்றன. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீ வைத்து கொளுத்தினார்களா என்ற விபரம் இன்னும் தெரிய வரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.