#BREAKING எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
ரூ.8 கோடி ஏரி மண் திருட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க மாநாட்டுக்காக திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் அனுமதியின்றி 45.72 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு, எ.வ.வேலு மகன் குமரன் நிறுவன நிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. திமுக மாநாட்டு திடலை சீரமைக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. 70 ஏக்கர் ஏரியில் 12 ஏக்கரில் ஜேசிபி மூலம் மண் தோண்டியதாக குற்றச்சாட்டு பதிவானது. இதனால் அரசுக்கு ரூ.8.22 கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரூ.8 கோடி மதிப்பிலான இந்த மணல் கொள்ளை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கும் எ.வ.வேலு மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.