×

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1,28,934 கடன் உள்ளது: அமைச்சர் மரிய வில்சன்

 

தமிழ்நாட்டின் கணக்கு புத்தகத்தை உங்கள் முன் திறந்து வைக்கிறேன் என வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் GST குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிந்துள்ளது. கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92% உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசாிக்கும் கீழே சாிந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 2.25%ல் இருந்து 2.22%-ஆக மோசமடைந்துள்ளது. கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயை பெருக்க முடியும். ஓட்டைகளை வைத்து கொண்டு வரியை விதிப்பதால் எந்த பயனும் இல்லை” என்றார்