×

கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார். கோவை பேரூர் செட்டி வீதியில் வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டடம் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்வேதா என்ற 27 வயது பெண், கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உள்பட 6 பேரை காயங்களுடன் மீட்டனர். தற்போது அவர்கள் அரசு
 

கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

கோவை பேரூர் செட்டி வீதியில் வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டடம் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்வேதா என்ற 27 வயது பெண், கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உள்பட 6 பேரை காயங்களுடன் மீட்டனர். தற்போது அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் வீடு இடிந்து நடந்த விபத்தில் ஸ்வேதா, கோபால் சாமி ஆகிய இருவர் உயிரிழந்தது அறிந்து வேதனை அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.