×

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் - சேரன் அணி வெற்றி

 

சென்னை வடபழனியில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் சேரன் அணி வெற்றி பெற்றது.

2026-2029ஆம் ஆண்டு பதவிக்கான திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 11 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இயக்குனர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். சென்னை வடபழனியில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்  நடைபெற்றது.இதில் இயக்குநர்கள் சேரன் மற்றும் வி.சி.குகநாதன் அணிகள் இடையே போட்டி போடுகின்றன.  விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா, நடிகை ராதிகா, இயக்குநர் மணிரத்னம், சமுத்திரகனி உள்ளிட்டோரும் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை வடபழனியில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் சேரன் அணி வெற்றி பெற்றது. தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது, மாலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் நேரில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.