திரைப்படக் கல்லூரி - மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு
May 20, 2024, 14:29 IST
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின், 2024-2025-ம் கல்வி ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 10ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை 'www.tn.gov.in' எனும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.