×

“போராடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படலாம்” : கல்லூரி முதல்வர் எச்சரிக்கை!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிகளை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் 47 வது நாளாக ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை கைவிடும்படி கல்லூரி நிர்வாகம் கூறிவரும் நிலையில், மாணவர்களுக்கான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கல்லூரி நிர்வாகம் தர மறுத்துள்ளது. அத்துடன் கல்லூரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா
 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிகளை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் 47 வது நாளாக ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை கைவிடும்படி கல்லூரி நிர்வாகம் கூறிவரும் நிலையில், மாணவர்களுக்கான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கல்லூரி நிர்வாகம் தர மறுத்துள்ளது. அத்துடன் கல்லூரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் போராடும் மாணவர்களுக்கு எதிராக, அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தமிழக அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இந்த சூழலில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் போராடும் மாணவர்கள் மீது வழக்கு பதிய படலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பெற்றோருக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எச்சரித்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என நியாயமான கோரிக்கைக்காக போராடும் மாணவர்களுக்கு இது போன்ற எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.