×

ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘வர்கீஸ் குரியன்’ உருவப்படம் ...

 

வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளையொட்டி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் 1921 நவம்பர் 26ம் தேதி பிறந்தவர், வர்கீஸ் குரியன். சென்னை லயோலா கல்லுாரியில், இயற்பியல் பட்டம் பெற்ற இவர்,  இயந்திரவியல், உலோகவியல், கால்நடை பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்கிறார்.

குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில் உள்ள அமுல்’ நிறுவனத்தின் பால் உற்பத்தி தொழிற்கூடத்தை மேம்படுத்துவதில் முழு பங்காற்றியிருக்கிறார். மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை, மாபெரும் தேசிய திட்டமாக மாற்றி உலகிலேயே மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியாவை உயர்த்தினார்.

அத்தகைய பெருமைக்குரிய 'இந்திய வெண்மைப் புரட்சி நாயகன்' வர்கீஸ் குரியன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவிக்கும் விதமாக தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது.