×

'என் மருமகன் 1000 சவரன் நகையை திருடிட்டாரு'- போலீசில் மாமனார் அதிர்ச்சி புகார்

 

கோவையில் தொழிலதிபரான மாமனார் வீட்டில்  900 சவரன் நகை திருடியதாக மருத்துவரான மருமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை கணபதி நகரை சேர்ந்த தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மருமகன் விக்னேஷ். இவர் மருத்துவராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் விக்னேஷ் குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததால் கோவை காளபட்டியில் உள்ள வீட்டில், மருமகன் குடும்பத்தினரை சண்முக பாண்டியன் தங்க வைத்திருந்தார். அந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி தர விக்னேஷ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு சண்முக பாண்டியன் மறுத்ததால், வீட்டை ரூ.15 கோடிக்கு விக்னேஷ் விற்றுள்ளார்.  மேலும் மாமனார் வீட்டு லாக்கரில் இருந்த  900 சவரன் நகைகளை காணவில்லை என்றும் சண்முக பாண்டியன் அளித்த புகாரின் பேரில்  மருமகன் விக்னேஷ், அவரது தாய், சகோதரி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகை குறித்து விக்னேஷிடம் கேட்டபோது 100 சவரன் நகைகளை மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள நகைகளை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக சண்முக பாண்டியன் போலீசாரிடம் கூறியுள்ளார்.