×

விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாப பலி! சென்னையில் சோகம்

 

சென்னை யானை கவுனியில் கிணற்றை தூர்வாரும் பணியின்போது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை யானைக்கவுனியில் 45 அடி ஆழக் கிணற்றைத் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி (65), அவரது மகன் ஐயனார் (35) ஆகிய இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிறிய விட்டமும், 45 அடி ஆழமும் உள்ள கிணற்றில் இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இருவரது உடலையும் கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.