×

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போதும் கூட 60 சதவிகிதத்துக்கும் மேலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வாங்காததால் அந்த திட்டம் கடந்த ஜனவரி 15ம் தேதிக்கு
 

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போதும் கூட 60 சதவிகிதத்துக்கும் மேலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வாங்காததால் அந்த திட்டம் கடந்த ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது ஜனவரி  முதல் அமலானது.

இந்நிலையில் ஜனவரி 2021, 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் நடைமுறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. இதன்படி நாளை முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடக்க வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் அமலுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் 48 சுங்க சாவடிகளில் கார், லாரி,பஸ் ,வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாக செலுத்த நேரிடும் என்றும்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .