Fast tag மூலம் நாள்தோறும் ரூ.186 கோடி வசூல்
ஃபாஸ்டேக் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்திற்கான சுங்க கட்டணமாக நாள்தோறும் சராசரியாக ரூ. 186 கோடி வசூலிக்கப்படுகிறது
நாட்டில் 2025 டிசம்பர் வரை மொத்தம் 11.86 கோடி ஃபாஸ்டேக் விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது ஃபாஸ்டேக் (மின்னணு சுங்க கட்டண வசூல்) மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் 98 சதவிகிதத்திற்கும் அதிகமான கட்டணம் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள் 2008-ன் கீழ் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்காக தள்ளுபடி கட்டணத்துடன் கூடிய ஆண்டு ஃபாஸ்டேக் அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 2025 ஆகஸ்ட் 15 வரை 42 லட்சம் ஆண்டு ஃபாஸ்டேக் அட்டைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. 2025 டிசம்பர் 31 வரை 19 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சுமார் 25 சதவிகித வர்த்தக பயன்பாடில்லா வாகனங்கள் ஆண்டு ஃபாஸ்டேக் அட்டையை பயன்படுத்தி ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேக் மூலம் சராசரியாக ரூ.186 கோடி வசூலாகிறது.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்..