×

புதிய வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை நிலத்தை விட்டும் வேளாண் தொழிலை விட்டும் அப்புறப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உள்ளது. உடனடியாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சார்ந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து
 

மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை நிலத்தை விட்டும் வேளாண் தொழிலை விட்டும் அப்புறப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உள்ளது. உடனடியாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சார்ந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. சட்டத்தை நிறைவேற்றக்கூடாது கிடப்பில் போட வேண்டும் என வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் வரும் 24ஆம் தேதி தஞ்சை திருவாரூர் நாகை திருச்சி கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் எனவும் இதில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் திடீரென அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.