“தவெக நிர்வாகி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கிறார்! இது விஜய் காதுக்கு போகணும்”- காரை முற்றுகையிட்டு விவசாயிகள் கதறல்
காட்டுமன்னார் கோவிலில் வண்டல் மண் அடிக்கும் விவசாயிகளிடம் தவெக இணை செயலாளர் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
த.வெ.க. நிர்வாகியின் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்.. ஏரியில் வண்டல் மண் அள்ள ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்பதாகப் புகார்#Cuddalore | #TVK | #Farmers | #Issue | #PolimerNews pic.twitter.com/2Y6Q28ZrhN
— Polimer News (@polimernews) June 26, 2026
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலத்தில் அரசு அனுமதியுடன் ஏரியில் வண்டல் மண் எடுக்க சென்ற விவசாயிகள், தவெக இணை செயலாளர் புகழ் வேந்திரன், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறியதுடன், அவரது காரையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏழை விவசாயிகள் தங்கள் விவசாய நில மேம்பாட்டிற்காக அரசு அனுமதித்துள்ள இலவச வண்டல் மண்ணை ஏற்றிச் சென்றபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி புகழ்வேந்திரன் என்ற நபர் ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட விவசாயிகளையும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “டிராக்டரில் மண் அடிக்க விஜய் கட்சியிலிருந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இது விஜய் கவனத்துக்கு போக வேண்டும். வண்டல் மன் எடுப்பதற்காக அனுமதி எங்களிடம் இருக்கிறது. இருப்பினும் ரூ.1 லட்சம் கேட்கின்றனர். ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு மண் அடிக்க சொல்கின்றனர்” என்கின்றனர்.