×

விவசாயிகள் கவலை! மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு! 

 

சேலத்தில்  அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. 

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,200 கன அடியாக குறைந்தது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,483 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,200 கன அடியாக குறைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், ஒகே னக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 9,500 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையால், கர்நாடக அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் முழு ளளவை கொள் எட்டியுள்ளன. இதனால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரி யாற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 5,350 கே.ஆர்.எஸ்., கன அடி, அணையில் இருந்து 6,582 என மொத்தம், கன அடி உபரிநீர் கன அடி 11,932 காவிரியில் வெளியேற்றப்பட்டது.

தமிழக எல்லை பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம், 5 மணிக்கு வினாடிக்கு, 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 9,500 கன அடி யாக சரிந்தது. இதனால், 
ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைந்து, சீராக ஆர்ப்பரித்து கொட்டியது.