×

நாய் கடித்து விவசாயி பரிதாப பலி

 

கிருஷ்ணகிரி அருகே நாய் கடித்து காயமடைந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். 


கிருஷ்ணகிரி அடுத்த தவளம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (45) விவசாயி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று ஏகாம்பரத்தின் இடது காலில் கடித்தது. இதையடுத்து அவர் பெல்லாரம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டார். தொடர்ந்து முறையான சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அவருக்கு உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டன. மேலும் அவருக்கு கையில் வலி எடுத்தது. ஆனாலும் முறையான சிகிச்சை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி கடுமையான காய்ச்சல், வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள அவருக்கு ரேபிஸ் அறிகுறி இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏகாம்பரம் இன்று பரிதாபமாக இறந்தார்