ரசிகர்கள் ஷாக்..!! கணுக்காலில் காயம்; ஆசிய விளையாட்டில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்..!
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும், இந்திய தடகள வரலாற்றில் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக, நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான 'மேஜர் தியான் சந்த் கேள் ரத்னா' மற்றும் 'பத்மஸ்ரீ' விருதுகளைப் பெற்று ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கும் பெரும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தாண்டில் நடக்கவுள்ள முக்கிய போட்டிகளில் இருந்து விலகுவதாக நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே காயத்தினால் அவதிப்பட்டு வந்த அவர், ஜூனில் நடந்த தோஹா டைமண்ட் லீக் மூலம் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார். அந்தத் தொடரில் அவர் 85.69 மீட்டர் ஈட்டியை எறிந்து 4வது இடத்தை பிடித்தார். அதன்பிறகு, கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் பங்கேற்ற அவர் 85.83 மீட்டர் ஈட்டியை வீசி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அண்மையில் லாசன் நகரில் நடந்த டைமண்ட் லீக்கில் 88.05 மீட்டர் ஈட்டியை வீசி, மீண்டும் தனது பார்முக்கு திரும்பினார். இந்த நிலையில், பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தாண்டில் நடக்கவுள்ள முக்கிய போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது போட்டிகளை விட தனது உடல் நலத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா பங்கேற்க முடியாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 29, 2026