×

பிரபல MUKBANG INFLUENCER மாரடைப்பின் காரணமாக காலமானார்..!

 

ஆன்லைனில் கான்ஃபான் யிங்கியிங் என்று பரவலாக அறியப்படும் சென் ஸியி , கேமராவின் முன் அசாதாரண அளவில் உணவைச் சாப்பிடுவதன் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவர் காலமானதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பணத்தையும் வேலையையும் விட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து தனது ஆதரவாளர்களை எச்சரித்திருந்தார்.

நீண்ட நாட்களாகப் உடல்நலம் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, மாரடைப்பு ஏற்பட இதுவே முக்கியக் காரணமாக அமைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் மற்றும் உள்விவகாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவர் கடைசியாக நடத்திய நேரலை ஒளிபரப்பின் போது ஒரே மூச்சில் அதிகப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டதால், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உணவு உண்ணும் சவால்களில் ஈடுபடுவது, நள்ளிரவு வரை விழித்திருந்து பணிபுரிவது மற்றும் செயற்கையாக வாந்தியை வரவழைப்பது போன்ற ஆபத்தான முறைகள் உடலில் தீவிரமான எலக்ட்ரோலைட் சமநிலைக் குலைவை ஏற்படுத்துகின்றன.

இதன் காரணமாக உடலில் ஏற்படும் பொட்டாசியம் பற்றாக்குறை இதயத்தை நேரடியாகப் பாதித்து, மீள முடியாத உடல்நலக் கேடுகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். “பணம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட உடல் ஆரோக்கியமே பிரதானம்” என்று தனது கடைசிப் பதிவில் யிங்யிங் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் தற்போது பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.

அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவில் ஒரே நேரத்தில் 60-லிருந்து 70 அவித்த முட்டைகளை சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தகவல்; ‘பணம் முக்கியம்தான் ஆனால் அதைவிட ஆரோக்கியம் முக்கியம்’ என அவர் இறுதியாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது 

News Update | அளவுக்கு மீறினால்...

இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்க்கு மேல் வைத்திருந்த பிரபல MUKBANG INFLUENCER யிங்யிங் (24) மாரடைப்பின் காரணமாக காலமானார்

அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவில் ஒரே நேரத்தில் 60-லிருந்து 70 அவித்த முட்டைகளை சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் என… pic.twitter.com/O0Ua59zAVw

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 9, 2026