சாலை விபத்தில் பிரபல குதிரை வண்டி ஜாக்கி சிறுவன் கணேசன் உயிரிழப்பு
காரைக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், குதிரை வண்டி பந்தய பிரபலமான சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களில் பாரம்பரியக் குதிரை வண்டிப் பந்தயங்களில் கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த சிறுவன் கணேசன் (16) சாலை விபத்தில் உயிரிழந்தார். 16 வயதிலேயே அனுபவிக்க பல குதிரை வண்டி ஜாக்கிகளுக்கு மத்தியில் அதிவேகமாக வண்டியைச் செலுத்தித் தனக்கென தனி இடம் பிடித்தவர் கணேசன். இவர் நேற்று தனது குதிரையை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தபோது காரைக்குடி அருகே நிலைத்தடுமாறி சரக்கு வாகனம் கவிழ்ந்தது. உடனே சிறுவன் கணேசன் உயிரை காத்துக்கொள்ள வாகனத்திலிருந்து கீழே குதித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வண்டி அவர் மீது விழுந்ததில், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.