×

நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடி: மாணவி ஒருவர் கைது

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திக்ஷா எனும் மாணவி கலந்துகொண்டார். இவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற நிலையில் ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொண்டு வந்து 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் அளித்த புகாரில் மாணவி மற்றும் அவரது தந்தை மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ கலந்தாய்வின் போது போலி
 

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திக்ஷா எனும் மாணவி கலந்துகொண்டார். இவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற நிலையில் ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொண்டு வந்து 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் அளித்த புகாரில் மாணவி மற்றும் அவரது தந்தை மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ கலந்தாய்வின் போது போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தந்த விவகாரத்தில் மாணவி மற்றும் தந்தை பாலச்சந்திரனுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்ட போதும் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து கடந்த ஒன்றாம் தேதி பெங்களூரில் பதுங்கி இருந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் விசாரித்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மாணவி தீக்சாவை சென்னை பெரியமேடு காவல்துறையினர் பெங்களூருவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தனிப்படை கைது செய்துள்ளனர். விசாரணையில் ரூ. 20 ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழை தயார் செய்தது குறிப்பிடதக்கது.