×

கள்ளசாராயம் : உயிரிழப்பு 7ஆக உயர்வு

 

 மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே  எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ள சாராயம் விற்கப்பட்ட நிலையில் இதை குடித்த நபர்களுக்கு வாந்தி,  மயக்கம் என உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.  கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் முண்டியம்பாக்கம், மரக்காணம், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர்.  ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் , சங்கர்,  தரணி வேல் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.  அத்துடன் ஆபத்தான நிலையில் மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வர்  மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.  இதை தொடர்ந்து விழுப்புரம் ,முண்டியம்பாக்க,ம் திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி, மலர்விழி , மண்ணாங்கட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக அதிகரித்தது.  இந்நிலையில் கள்ளச்சாராயத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்பவர் இன்று காலை உயிரிழந்தார்.  இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக  மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன் , உதவி  ஆய்வாளர்கள் தீபன் ,சீனிவாசன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுரு ஆகியோர்  தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.