×

‘மருத்துவரிடம் பண மோசடி’ : கையும் களவுமாக சிக்கிய போலி வக்கீல்!

குமரி அருகே மருத்துவரிடம் பண மோசடி செய்த போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் வசித்து வரும் ராமதாஸ் என்பவர், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மற்றொரு மருத்துவமனை கட்டுவதற்கான பணியை தொடங்கியிருக்கிறார். அதற்கு பணம் தேவைபட்டுள்ளது. அச்சமயம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அருள் முருகன் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு தொடங்கினால் ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக கூறியிருக்கிறார்.
 

குமரி அருகே மருத்துவரிடம் பண மோசடி செய்த போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் வசித்து வரும் ராமதாஸ் என்பவர், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மற்றொரு மருத்துவமனை கட்டுவதற்கான பணியை தொடங்கியிருக்கிறார். அதற்கு பணம் தேவைபட்டுள்ளது. அச்சமயம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அருள் முருகன் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு தொடங்கினால் ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக கூறியிருக்கிறார்.

அதனை நம்பி ராமதாஸ் அவரிடம் ரூ. 6 லட்சத்து 52 ஆயிரம் பணத்தை கமிஷனாக கொடுத்திருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட முருகன், ராமதாஸை ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த நிலையில், அப்போதே ராமதாஸ் முருகன் மீது புகார் அளித்திருக்கிறார். அப்போது, முருகன் தலைமறைவானதால் அவரை போலீசார் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முருகன் போலீசார் வசம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். விசாரணையில், அவர் கொடுத்த முகவரி உள்ளிட்ட அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு, முருகன் மீது பல காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அம்பலமாகியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.