சென்னையில் மயக்கமடைந்த மாணவிகள்- முயல்கள் காரணமா?
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவெற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் செயல்படாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நிறைவுபெற்று இன்று பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தேர்ந்த நிலையில் கடந்த நான்காம் தேதி மீண்டும் அதே போன்று 6 மாணவிகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பள்ளி மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டு தனியார் பள்ளி கல்வித்துறை இயக்குனர் முத்து பழனிச்சாமி நேரடியாக பள்ளியில் திங்கட்கிழமை ஒருநாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். 4 நாட்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் 4 நாட்களாக பள்ளியில் காற்று தரத்தின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது
இந்நிலையில் பெற்றோர்கள் பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை, பள்ளியை சீக்கிரமாக திறக்க வேண்டும், பள்ளி மூடி இருப்பதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாவதாகவும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். அந்த கடிதம் அனைத்தையும் பள்ளி நிர்வாகம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு இடமும் பள்ளி அருகில் இருக்கக்கூடிய வீடு வசிக்கும் நபர்களிடமும் ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என கண்டுபிடித்துள்ளனர்.
மாணவ, மாணவியர்கள் மர்ம பொருட்கள் ஏதேனும் எடுத்து வந்தார்களா என்பது குறித்து கண்காணிப்பதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் போட உத்தரவு பிறப்பித்து உடனடியாக அனைத்து தளங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சி 1-வது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் இப்ராகிம் தலமையில் கூட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு மாவட்ட கல்வி அலுவலர் முருகன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காவல் துறை, வருவாய்த் துறை கல்வித் துறை, பள்ளி நிர்வாகம் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கடந்த மாதம் 25 ம் தேதி ஏற்பட்ட வாயு கசிவு சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் திறப்பில் இதுவரை எவ்வித விளக்கம் கொடுக்கவில்லை
பள்ளியில் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கூட்டம் ஏற்பாடு செய்து பள்ளி திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம், “பள்ளியில் வாயு கசிவை ஏற்படதற்கான எவ்வித அறிகுறியும் ஏற்படவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளனர், அறிக்கையாக இன்னும் பெறப்படவில்லை. மேலும் பள்ளியில் 35க்கும் மேற்பட்ட முயல்கள் வளர்ப்பதால் முயல்களுடைய கழிவுகள் இருந்து கூட துர்நாற்றம் பரவி இருக்கலாம். ஆகவே முயல்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.