×

தேர்வு எழுதும் மாணவர்கள் வேன் மூலம் அழைத்துச் செல்ல வசதி! – செங்கோட்டையன் தகவல்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அழைத்துவந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மாணவர்கள் வருவதற்கு முன்னால் கிருமிநாசினி தெளிப்பதற்கும், மாணவர்கள் தேர்வெழுதி முடித்துவிட்டு சென்றதற்கு பின்பும் நடவடிக்கை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின் அடிப்படையில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளுடைய முடிவுகள் ஜூலை மாதம் 3-வது வாரத்திற்குள் வேகமாக நிறைவேற்ற
 

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அழைத்துவந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மாணவர்கள் வருவதற்கு முன்னால் கிருமிநாசினி தெளிப்பதற்கும், மாணவர்கள் தேர்வெழுதி முடித்துவிட்டு சென்றதற்கு பின்பும் நடவடிக்கை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின் அடிப்படையில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளுடைய முடிவுகள் ஜூலை மாதம் 3-வது வாரத்திற்குள் வேகமாக நிறைவேற்ற வேண்டுமென்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அதனடிப்படையில் அந்த அறிவுரைகளை ஏற்று பணிகள் நிறைவேற்றப்படும்.
எங்களை பொறுத்தவரை எந்தெந்த இடங்களில் கொரோனா வைரஸ் கூடுதலாக இருக்கிறதென்று மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக கண்காணித்த இடத்தில் இருக்கின்ற 10-ம் வகுப்பு தேர்வெழுதுகிற மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுதுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீண்டும் மாணவர்களை அவர்களுடைய பகுதிக்கு கொண்டு சேர்க்கின்ற பணியும் நிறைவேற்றப்பட இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.