×

கடைசி 4 நாட்களில் தான் தேர்தல் பிரச்சாரமே மாறி இருக்கிறது... தி.மு.க தோல்விக்கு காரணம் என்ன?- எழிலரசன்

 

ஈரோடு, நாமக்கல் மாவட்ட கள ஆய்வுக்கு நியமிக்கப்பட்ட எழிலரசன்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன், “இளைஞர்களுக்கு அதிக அளவில் பொறுப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். கடைசி 4 நாளில் சமூக வலைத்தளம் மூலமாக தவெக ஆதரவு பெருகியுள்ளது. மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வேட்பாளர்களாக அறிவித்தனர். வாக்குப் பதிவுக்கு 3 நாட்கள் முன்புவரை திமுகவுக்குதான் வெற்றி வாய்ப்பு இருந்தது. கடைசி 4 நாட்களில்தான் பிரச்சாரம் மாறி இருக்கிறது. அதுவரை திமுகவிற்கு ஆதரவான சூழல்தான் இருந்தது” என்றார்.