☰
×

பட்டாசு விபத்தால் கண்கள் பாதிப்பு.. 1400-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

 

பட்டாசு விபத்தால் கண்கள் பாதிப்பு ஏற்பட்டு 1400-க்கும் மேற்பட்டோர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

2026-ம் ஆண்டு அனைத்து அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் 1464-க்கும் மேற்பட்டோருக்கு, பட்டாசு விபத்தில் கண்கள் பாதிப்பால் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.  மதுரையில் மட்டும் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இனி வரும் காலங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்களை பாதுகாப்போம் என அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் உஷா கூறியுள்ளார்.