×

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளார். மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு அங்கு ஆய்வு மேற்கொண்டனர். தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நெருங்கியது. இதனால் இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை
 

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளார்.

மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு அங்கு ஆய்வு மேற்கொண்டனர். தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நெருங்கியது. இதனால் இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 34 ஆயிரத்து 500 கன அடி நீர் வரை வெளியேற்றப்படும். செம்பரம்பாக்கத்தில் இருந்து அடையாறுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்படும் நிலையில், அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் சென்னை வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கானுநகர், சூளைபள்ளம், திடீர் நகர் ,அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றம் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் வெளியேற அறிவுறுத்தல்.